இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
தெஹ்ரான், இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜுன் மாதம் மோதல் மூண்டது. 12 நாட்கள் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இதனிடையே, இந்த மோதலுக்குப்பின் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்கள் நாட்டை சேர்ந்த பலரையும் ஈரான் கைது செய்து வருகிறது. கைது செய்யப்படும் நபர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றி வருகிறது. தற்போது வரை 10க்கும் மேற்பட்டோருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இளைஞருக்கு ஈரான் நேற்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. ஈரானின் ஊர்மியா நகரை சேர்ந்த 27 வயதான கேஷ்வர்ஷ் என்ற இளைஞரை கடந்த சில மாதங்களுக்குமுன் ஈரான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேஷ்வர்ஷ் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். கேஷ்வர்ஷ் இடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மொசாட்டிற்கு உளவு பார்த்தது உறுதியானதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கேஷ்வர்சுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
