அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் வங்காளதேசம்

  தினத்தந்தி
அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் வங்காளதேசம்

டாக்கா, வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்டார்லிங் அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் நேற்று 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் முகமதுல் ஹசன் ஜாய் 169 ரன்களுடனும், ஹகியூல் 80 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் அயர்லாந்தை விட 52 ரன்கள் முன்னிலையில் வங்காளதேசம் உள்ளது.

மூலக்கதை