உலகக் கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’
கோவா, 11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 8 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு சுற்றிலும் 2 ஆட்டங்கள் நடத்தப்படும். இதில் 4-வது சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 30-வது நகர்த்தலில் டிரா கண்டார். முதலாவது ஆட்டமும் டிரா ஆனதால் வெற்றியாளரை தீர்மானிக்க இவர்கள் இடையிலான மோதல் டைபிரேக்கருக்கு நகருகிறது. இதே போல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்டமாஸ்டர் பீட்டர் லெகோவுடனும், ஹரிகிருஷ்ணா, சுவீடனின் நில்ஸ் கிரான்ட்லிசுடனும் ‘டிரா’ செய்தனர். இவர்களது ஆட்டத்திலும் 5-வது சுற்றை எட்டப்போவது யார் என்பது இன்றைய டைபிரேக்கர் மூலம் தெரிய வரும். அதே சமயம் உலக ஜூனியர் சாம்பியனான இந்தியாவின் பிரணவ், உஸ்பெகினிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவுடனும், கார்த்திக் வெங்கட்ராமன், வியட்னாமின் லி குவான் லியாமுடனும் தோற்று வெளியேறினார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
