பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் கட்டாய விடுப்பு; ஆணை பிறப்பித்த கர்நாடக அரசு
பெங்களூரு,கர்நாடகாவில் பெண் பணியாளர்களின் நலனிற்காகவும் மற்றும் பணியிடத்தில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காகவும், மாதவிடாய் விடுப்பு கொள்கையை கர்நாடக அரசு உருவாக்கி உள்ளது. அதன்படி, அரசு, தனியார் நிறுவனங்கள், ஆடை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு மாதத்தில் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்க கர்நாடக மந்திரி சபை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் கட்டாய விடுப்பு வழங்குவதற்கான ஆணை பிறப்பித்த கர்நாடக அரசு இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி, 18 முதல் 52 வயதுடைய பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய கட்டாயம் விடுப்பு வழங்கப்படவேண்டும். விடுப்பு எடுப்பதற்கு பெண்கள் எந்தவித மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டியதில்லை. அதேவேளை, ஒரு மாதத்தில் மாதவிடாய் கால விடுப்பு எடுக்கவில்லையென்றால் அந்த விடுப்பை அடுத்த மாதம் சேர்த்து (2 நாட்களாக) எடுக்க முடியாது என கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
