அரசியலுக்காக பாஜக போராட்டம் நடத்துகிறது: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

  தினத்தந்தி
அரசியலுக்காக பாஜக போராட்டம் நடத்துகிறது: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

சென்னை, சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடம் மற்றும் ராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் முதியோர்களுக்கான உறைவிடம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, கல்லூரியின் கட்டுமானப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. வரும் கல்வியாண்டில் இக்கல்லூரியானது புதிய கட்டிடத்தில் செயல்படும். தி.மு.க. ஆட்சி குற்றங்களை தடுக்கின்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறது. கோவை மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்யப்பட்டு உள்ளனர். இது சட்டத்தின் ஆட்சி. மணிப்பூரை போல் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இந்த ஆட்சி உறங்கிக் கொண்டிருக்கவில்லை. எந்த பிரச்சினையும் கையில் கிடைக்காதவர்கள் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளை கையில் எடுத்து ஆடுவது தேர்தலை மையப்படுத்தி செய்கின்ற ஒரு போராட்டமே.எந்த குற்றச்சம்பவம் நடந்தாலும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பா.ஜனதாவின் போராட்டம் அரசியலுக்காக போடுகின்ற வேடம். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை