தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி அளித்த புகார் - இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது

  தினத்தந்தி
தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி அளித்த புகார்  இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது

கோவை, கோவையைச் சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி(வயது 20). இவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் த.வெ.க. குறித்தும், அக்கட்சியை சேர்ந்தவர்களின் செயல்பாடுகள் குறித்தும் வைஷ்ணவி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் த.வெ.க. தலைவர் விஜய்யை சந்திப்பதற்காக மாமல்லபுரத்திற்கு சென்றதை குறிப்பிடும் வகையில் ஏ.ஐ. வீடியோ ஒன்றை வைஷ்ணவி பகிர்ந்திருந்தார். இதற்கு த.வெ.க. தொண்டர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலமான கார்த்திக் என்பவர், வைஷ்ணவியின் புகைப்படத்துடன் கூடிய சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது குறித்து வைஷ்ணவி அளித்த புகாரின் பேரில், கார்த்திக் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மூலக்கதை