பீகார் தேர்தல்: வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து

  தினத்தந்தி
பீகார் தேர்தல்: வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து

பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக நவம்பர் 6-ந்தேதி(நேற்று) 121 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், முதல் கட்ட தேர்தலில் மொத்தம் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த‌தாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை