அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பாலம் கட்டத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து யோகநாதன் என்ற இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசின் அலட்சியத்தால் பலியான இளைஞரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு உடனடியாகத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன். சில மாதங்களுக்கு முன் தாராபுரம் அருகே இதே போல பாலம் கட்டுவதற்காகத் தோண்டப்பட்டிருந்த 12 அடி குழியில், இரு சக்கர வாகனத்துடன் விழுந்த கணவன், மனைவி பலியானதோடு அவர்கள் மகளும் படுகாயமடைந்த நிலையில் மீண்டுமொரு சம்பவம் அதே போல நிகழ்ந்துள்ளது திமுக அரசின் தொடர் அலட்சியத்தையே காட்டுகிறது. பாலம் கட்டத் தோண்டும் இடத்தில் எச்சரிக்கைப் பலகைகளோ தடுப்புகளோ வைக்காமல் அம்போவென விட்டுச் சென்று அப்பாவி உயிர்களைப் பறிப்பது தான் "நாடு போற்றும் நல்லாட்சி"-யின் லட்சணமா? ஒன்று சாலை, பாலம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் மக்களை வதைக்கிறீர்கள் அல்லது உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் போர்வையில் கமிஷனடித்து வேலைகளை முறையாகச் செய்யாமல் மக்களை வதைக்கிறீர்கள். மொத்தத்தில் இது பொற்கால ஆட்சியல்ல, கொலைகார ஆட்சி என்பதே உண்மை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடும் அறிவாலய அரசு!ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பாலம் கட்டத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து யோகநாதன் என்ற இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. @arivalayam அரசின் அலட்சியத்தால் பலியான இளைஞரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்… pic.twitter.com/w1LZYL2dS2




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
