ராமேசுவரம் மீனவர்கள் 30 பேருக்கு அபராதம் விதித்த இலங்கை கோர்ட்டு; செலுத்தாததால் மீண்டும் சிறையில் அடைப்பு
ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி 4 விசைப்படகுகளில் 30 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து, அந்நாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வவுனியா சிறையில் அடைத்தது. இந்த 30 பேரும் இன்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி ரபீக் விசாரித்தார். எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்து முதல் முறையாக கைது செய்யப்பட்ட 26 மீனவர்களுக்கும் தலா ரூ.2½ லட்சம் (இந்திய மதிப்பு தலா ரூ.73 ஆயிரம்) அபராதம் விதித்தும், அதை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தார். மற்ற 4 மீனவர்கள் 2-வது முறையாக கைது செய்யப்பட்டதால் இந்த மீனவர்களுக்கு தலா ரூ.2¾ லட்சம் (இந்திய மதிப்பு தலா ரூ.80 ஆயிரம்) அபராதம் விதித்தும், அதை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனை என்றும் உத்தரவிட்டார். இந்த அபராத தொகை செலுத்தப்படாததால் 30 மீனவர்களும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
