சிறப்பு தீவிர திருத்தப்பணி: வாக்குச்சாவடி அலுவலரை அறிந்துகொள்ள இணையதள முகவரி

  தினத்தந்தி
சிறப்பு தீவிர திருத்தப்பணி: வாக்குச்சாவடி அலுவலரை அறிந்துகொள்ள இணையதள முகவரி

சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அவர்கள் திரும்பப் பெற்றும் வருகின்றனர். இந்தநிலையில், மக்கள் தங்கள் தொகுதியில் உள்ள தங்கள் வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் யார்? என்பதை தெரிந்து கொள்வதற்கான இணையதள முகவரியை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, https://erolls.tn.gov.in/blo/என்ற இணையதளத்தில் சென்று தங்கள் பகுதி வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

மூலக்கதை