பெண் நடன கலைஞர்கள் ஓரினச்சேர்க்கை திருமணம்; மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

  தினத்தந்தி
பெண் நடன கலைஞர்கள் ஓரினச்சேர்க்கை திருமணம்; மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலம் சுந்தரவனம் பகுதியை சேர்ந்தவர் ரியா (வயது 19). பெற்றோரை இழந்த இவர் அவருடைய அத்தை மற்றும் மாமாவால் வளர்க்கப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராக்கி(வயது 20). இருவரும் நடன கலைஞர்களாக பணி யாற்றி வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு கோவில் திருவிழாவில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அவர்களிடையே காதல் ஏற்பட்டு ஓரினசேர்க்கையாளராக மாறினர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்தனர். இதனை தொடர்ந்து இருவரும் தாங்கள் பெண்கள் என்பதை மறந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினரிடம் தெரிவித்தனர் ஆனால் இந்த திருமணத்திற்கு ரியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ராக்கியின் குடும்பத்தினர் தங்களுடைய மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் உதவியுடன் 2 பேருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. ரியா மணமகன் உடையிலும், ராக்கி மணப்பெண் அலங்காரத்திலும் அழைத்து வரப்பட்டனர். இருவரும் கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்து கொண்ட னர். இதில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.மேலும் பலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து ரியா கூறுகையில், "நான் அவளை விரும்பினேன், அதனால் நாங்கள் திருமணம் செய்து கொண் டோம். என் வாழ்நாள் முழுவதும் நான் அவளுடன் இருப்பேன். அன்புதான் முக்கிய விஷயம்," என்றார்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், நாங்கள் இதற்கு முன்பு இதுபோன்ற திருமணத்தைப் பார்த்ததில்லை. அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள்,அதனால் தான் நாங்கள் இங்கே இப்படி ஒரு திருமணத்தை நடத்தி வைத்தோம் என்றனர். இந்தியாவில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் படவில்லை. ஆனாலும் இதுபோன்ற திருமணங்கள் அவ்வபோது நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை