பளபளப்பான சருமம் எப்படி பராமரிக்கிறீர்கள்? எனக்கேட்ட வீராங்கனை- பிரதமர் மோடி அளித்த சுவாரசிய பதில்

  தினத்தந்தி
பளபளப்பான சருமம் எப்படி பராமரிக்கிறீர்கள்? எனக்கேட்ட வீராங்கனை பிரதமர் மோடி அளித்த சுவாரசிய பதில்

புதுடெல்லி,இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முதல் முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது . இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் மகளிர் கிரிக்கெட் அணியினர் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில், இந்திய அணி வீராங்கனை ஹர்லீன் தியோல், பிரதமரின் முகம் பொலிவுடன் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதாவது, ஹர்லீன் தியோல், உங்கள் சருமம் பளபளப்பாக இருப்பதற்கான ஸ்கின் கேர் பராமரிப்பு என்ன? என்று கேட்டார். இதற்கு புன்சிரிப்புடன் பதிலளித்த பிரதமர் மோடி, 25 ஆண்டுகளாக அரசாங்கத்தின் தலைவராக இருக்கிறேன் மக்களின் ஆசீர்வாதங்கள்தான் என்னை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகின்றன” என்றார்.. மேலும், 2020 ஆம் ஆண்டில் இளம் சாதனையாளர்களுடனான ஒரு கலந்துரையாடலின்போது, தனது பளபளப்பான சருமத்தின் ரகசியம் கடின உழைப்பு மற்றும் வியர்வை என்றும், வியர்வையை முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் பளபளப்பு கிடைப்பதாகவும் முன்பு குறிப்பிட்டிருந்ததையும் நினைவுபடுத்தினார்.

மூலக்கதை