நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா: ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா இந்தியா?
புதுடெல்லி, ரஷியா-உக்ரைன் பிரச்சினையை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை மேற்கத்திய நாடுகள் நிறுத்தின. ஆனால் ரஷியாவின் அதீத தள்ளுபடியை பயன்படுத்திய இந்தியா அதிக இறக்குமதியில் ஈடுபட்டன.இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா மீது 50 சதவீதம் வரிவிதித்தார். இதனை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக இந்திய பிரதமர் மோடி கூறியதாக டிரம்ப் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் தனியார் எண்ணெய் நிறுவனமான ரிலையன்சின் நயாரா மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், மங்களூர் சுத்திகரிப்பு, ஹெச்.பி.சி.எல்-மிட்டல் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்து வருகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் தனது கவனத்தை மத்திய கிழக்கு நாடுகள் மேல் செலுத்த தொடங்கிவிட்டது. ஈராக்கிடம் இருந்து 31 சதவீதமும், சவுதியிடம் இருந்து 87 சதவீதமும் கச்சா எண்ணெய்யை ரிலையன்சின் நயாரா நிறுவனம் கடந்த மாதத்தில் கொள்முதல் செய்தது. அமெரிக்காவிடம் இருந்தும் இறக்குமதியை இருமடங்காக உயர்த்தியது. இந்தநிலையில் வருகிற 21-ந் தேதியுடன் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் அமலுக்கு வர இருப்பதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதற்கு பின் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தும் நிலையில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
