ஐ.சி.யு.வில் 105 நாள்... பிறந்து 22 வாரங்களே ஆன குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

  தினத்தந்தி
ஐ.சி.யு.வில் 105 நாள்... பிறந்து 22 வாரங்களே ஆன குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

புதுடெல்லி, கிழக்கு டெல்லியின் பத்பர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்கள் சாஹில் தனேஜா மற்றும் திவ்யா. இந்த தம்பதிக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், செயற்கை கருத்தரிப்பில் திவ்யா கர்ப்பிணியானார். அவருக்கு 22 வாரங்களில் பிரசவ வலி ஏற்பட்டதில், அறுவை சிகிச்சை வழியே 22 வாரங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அப்போது அது 525 கிராம் எடையுடன் காணப்பட்டது. உடனடியாக, பிறந்த குழந்தையை ஐ.சி.யு.வில் வைத்து பாதுகாப்பாக பராமரித்தனர். இதில், 105 நாட்களுக்கு பின்னர் சிகிச்சையில் பலன் ஏற்பட்டு அந்த குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டது. அது 2.010 கிலோ எடையுடன் உள்ளது. இதுபோன்ற சூழல்களில் குழந்தை தப்பி பிழைப்பது அரிது என டாக்டர்கள் கூறும் நிலையில், நவீன சிகிச்சை, சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பெற்றோரின் ஈடுபாடு ஆகியவற்றால், குழந்தைகள் தப்பி பிழைக்கும் சாத்தியம் உள்ளது என்றும் கூறுகின்றனர்.

மூலக்கதை