ராஷ்மிகா மந்தனாவின் “தாமா” படத்தின் வசூல் அப்டேட்
கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹாரர் படங்கள் அதிக அளவில் வசூல் செய்துள்ளன. அதன்படி, 'ஷைத்தான்', 'முஞ்யா', 'ஸ்ட்ரீ 2' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த சூழலில், இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த ‘தாமா’ படத்தை ஆதித்யா சர்போத்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்துள்ளார். நவாஸுதீன் சித்திக், சத்யராஜ் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படம் தீபாவளிக்கு வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேடாக் ஹாரர்-காமெடி யுனிவர்ஸில் இருந்து வெளிவந்த ஐந்தாவது படம் தாமா. இப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வந்தது. இந்நிலையில், ‘தாமா’ படம் 14 நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.A timeless love has awakened from the dark #Thamma is running successfully in cinemas. Book your tickets now to enjoy this love story in Hindi and Telugu!- https://t.co/RBDd4wKxWS- https://t.co/nHoTXhYZyg#ThammaInCinemas #MaddockHorrorComedyUniverse… pic.twitter.com/OGa04tfxEb




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
