பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா 263 ரன்களில் ஆல் அவுட்

  தினத்தந்தி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா 263 ரன்களில் ஆல் அவுட்

பைசலாபாத், பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் பைசலாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - குயிண்டன் டி காக் களமிறங்கினர். பாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி தென் ஆப்பிரிக்க அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில் பிரிட்டோரியஸ் 57 ரன்களிலும், டி காக் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் ஆடமிழந்ததும் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசை தடுமாறியது. டோனி டி சோர்சி 18 ரன்களிலும், சினெதெம்பா 22 ரன்களிலும், டோனோவன் பெரீரா 3 ரன்களிலும், ஜார்ஜ் லிண்டே 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய கேப்டன் மேத்யூ பிரிட்ஸ்கே 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் கார்பின் போஷ் பொறுப்புடன் ஆட தென் ஆப்பிரிக்க அணி நல்ல நிலையை எட்டியது. போஷ் 41 ரன்களில் போல்டானார். 49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது, நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 264 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிதான் களமிறங்க உள்ளது.

மூலக்கதை