மகளிர் உலகக்கோப்பை நிறைவு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.

  தினத்தந்தி
மகளிர் உலகக்கோப்பை நிறைவு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.

துபாய், நவிமும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்தி வரலாறு படைத்தது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். மகளிர் உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த தென் ஆப்பிரிக்க லாரா வால்வார்ட் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஷ்லே கார்ட்னர் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 இடங்கள் எகிறி 10-வது இடத்திற்கு வந்துள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன் முதலிடத்தில் தொடருகிறார். தென் ஆப்பிரிக்காவின் மரிஜானே காப் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா 5-வது இடத்தில் தொடருகிறார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் முதல் 3 இடங்களில் மாற்றமில்லை. ஆஷ்லே கார்னர், மரிஜானே காப், ஹேய்லி மேத்யூஸ் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர். இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

மூலக்கதை