முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

  தினத்தந்தி
முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

பைசலாபாத், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. அதன்படி பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பைசலாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு: பாகிஸ்தான்: சைம் அயூப், பக்கர் ஜமான், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி(கேப்டன்), நசீம் ஷா, அப்ரார் அகமது தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டோனி டி சோர்ஜி,மேத்யூ ப்ரீட்ஸ்கே(கேப்டன்), சினெதெம்பா கேஷிலே, டொனோவன் பெரீரா, ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், போர்டுயின், லுங்கி நிகிடி, லிசாட் வில்லியம்ஸ்

மூலக்கதை