ஐபிஎல் 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்த டாம் மூடி

  தினத்தந்தி
ஐபிஎல் 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்த டாம் மூடி

லக்னோ, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த தொடரில் லக்னோ அணி 7வது இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் (2026) அடுத்த மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கான லக்னோ அணியின் கிரிக்கெட் இயக்குநராக ஆஸ்திரேலியாவின் டாம் மூடியை நியமித்து லக்னோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை லக்னோ நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Experience. Vision. Leadership. Welcome aboard the Super Giants Universe, Tom Moody! pic.twitter.com/DofUZopQpx

மூலக்கதை