’சாட்ஜிபிடி கோ’ இன்று முதல் ஓராண்டுக்கு இலவசம்: இந்திய பயனர்களுக்கு ஓபன் ஏஐ நிறுவனம் சலுகை
புதுடெல்லி, ஏஐ எனப்படும் செயற்கை நூண்ணறிவு தளங்கள் தற்போது இணைய உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி, எக்ஸ் தளத்தின் குரோக், பிரெப்ளெக்சிட்டி உள்ளிட்ட ஏஐ நிறுவனங்கள் சந்தையில் முன்னணியில் உள்ளன. போட்டியை சமாளிக்கவும் வாடிக்கையாளர்களை கவரவும் ஏஐ நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் அறிவித்து வருகின்றன.அந்த வகையில், ‘ஓபன் ஏஐ’ நிறுவனம் தனது பிரத்யேக ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவையை இந்திய பயனா்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்தது. அதன்படி, இந்த இலவச சேவை இன்று முதல் ஓராண்டுக்கு இலவசமாக கிடைக்கும். இதற்கு முன்பு வரை மாதம் ரூ. 399 க்கு சாட்ஜிபிடி கோ சேவை கிடைத்து வந்தது. இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி வெர்ஷனை விட இந்த, வெர்ஷனில் கூடுதல் தரவுகள், புகைப்படங்கள், வரைவுகள் உள்ளிட்டவற்றை அதிவேகமாக பெற முடியும். பெங்களூரில் இன்று ‘ஓபன் ஏஐ’ நடத்தவுள்ள சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மூலம், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவையை இந்தியா்கள் அதிக அளவில் எளிதில் அணுகிப் பயன்பெற முடியும் என்று ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
