தங்கம் விலை சரிவு: நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

  தினத்தந்தி
தங்கம் விலை சரிவு: நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

சென்னை,தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.95,360 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றிற்கு ரூ.80 குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை குறைந்த நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலை மாற்றம் இன்றி இருந்தது. தீபாவளி தினமான இன்று தங்கம் விலை குறைந்து இருப்பது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மூலக்கதை