விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்கள்; விமான சேவை நிறுத்தம்

  தினத்தந்தி
விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்கள்; விமான சேவை நிறுத்தம்

வில்னியஸ்,ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு லித்துவேனியா. இந்நாடு பெலாரஸ் அருகே உள்ளது. உக்ரைன் - ரஷியா போரில் லித்துவேனியா உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், லித்துவேனியாவின் தலைநகர் வில்னியசில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு மர்ம பலூன்கள் பறந்தன. இதனால் பாதுகாப்பு நலன் கருதி வில்னியஸ் விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. மேலும், போலாந்து, லாத்வியா ஆகிய நாடுகளுக்கும் விமானம் திருப்பி அனுப்பப்பட்டன. வில்னியஸ் நகரம் பெலாரசில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விமான நிலையத்தின் வான்பரப்பில் மர்ம பலூன்கள் பறக்கும் சம்பவத்தில் பெலாரசுக்கு தொடர்பு இருக்கலாம் என்று லித்துவேனியா அதிகாரிகள் சந்தேகம் எழுப்புகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன், ஜெர்மனியின் தலைநகர் முனிச் விமான நிலையங்கள் அருகே மர்ம டிரோன்கள் பறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை