இலங்கையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள்: அரசு எடுத்துள்ள புதிய முடிவு - லங்காசிறி நியூஸ்

இலங்கை அரசாங்கம் இந்த மாதத்திலிருந்து வரி நடைமுறை தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை அரசு டின் இலக்கம் தொடர்பில் இந்த முக்கிய நகர்வுகளை முன்னெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு பெரிய செலவுகளை மேற்கொள்வது கடினமாக இருக்குமென்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பாக லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கருத்துகளை பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். அதில், இலங்கையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு ஒருவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது எளிதாக தெரிந்து கொள்ள முடியும் என்றும், முறைகேடுகளை அரசால் எளிமையாக கண்டறிய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை அறிந்து கொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியை பார்வையிடவும்.
மூலக்கதை
