ஜப்பானில் இரவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு

  தினத்தந்தி
ஜப்பானில் இரவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் கிழக்கு கடற்கரையோரம் அருகே நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. பசிபிக் நெருப்பு வளையத்தில் எரிமலை மண்டலத்தில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால், அடிக்கடி லேசான நிலஅதிர்வுகள் ஏற்படும் நாடாக அறியப்படுகிறது. ஒரு நூற்றாண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள், சுனாமிகள் போன்றவை பலமுறை ஏற்பட்டு இருக்கின்றன.

மூலக்கதை