நரக தூதரானார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.. வலைத்தளங்களில் வைரலாகும் ஏ.ஐ. வீடியோ

  தினத்தந்தி
நரக தூதரானார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.. வலைத்தளங்களில் வைரலாகும் ஏ.ஐ. வீடியோ

வாஷிங்டன், அமெரிக்காவில் அரசு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று செலவின மசோதா நிறைவேற்றப்படுகிறது. இந்தநிலையில் இந்த செலவின மசோதா நிறைவேற தேவையான 60 சதவீத பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் டிரம்ப் அரசாங்கத்தால் பெற முடியவில்லை. இதனால் அமெரிக்க அரசு நிர்வாகம் தொடர்ந்து முடங்கியது. இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நரக தூதராக வேடமிட்டு பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நரக தூதர்போல ஜனாதிபதி டிரம்பை சித்தரித்து இந்த ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அமெரிக்க அரசு நிர்வாக முடக்கத்தை எதிர்க்கும் விதமான கருத்துகள் அடங்கிய பாடலை பாடியுள்ளார்.மேலும் அந்த வீடியோவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மேளதாளம் இசைக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள். மீசை, தாடி வைத்த குழந்தைகள்போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை டுரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளநிலையில் அந்த வீடியோ காட்டுத்தீயாக பரவுகிறது.

மூலக்கதை