கனடாவில் தீ விபத்தில் இந்திய வம்சாவளி தம்பதி, மகள் உயிரிழப்பு

தினமலர்  தினமலர்
கனடாவில் தீ விபத்தில் இந்திய வம்சாவளி தம்பதி, மகள் உயிரிழப்பு

ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவரது மகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்தில் சந்தேகம் இருப்பதால், தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கனடா நாட்டில் உள்ள டொரன்டோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து தீயில் கருகி உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டனர். போலீசார் விசாரணையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜீவ் வாரிக்கோ (51), அவரது மனைவி ஷில்பா கோதா (47) மற்றும் அவரது மகள் மாஹெக் வாரிக்கோ(16) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் வாரிக்கோ கனடா நாட்டில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தீ விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். இந்த தீ விபத்துக்கு ஏதும் சதிச்செயல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 நபர்களைக் கொண்ட குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனந்த் சுஜித், அவரது மனைவி அலைஸ் ப்ரியங்கா, மற்றும் அவர்களது இரட்டை குழந்தைகள் நோவா மற்றும் நெய்தான் ஆகியோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவரது மகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்தில் சந்தேகம் இருப்பதால், தீவிர விசாரணை நடந்து வருவதாக

மூலக்கதை