நம்பிக்கை ஓட்டெடுப்பில் தப்பியது நேபாள அரசு

தினமலர்  தினமலர்

காத்மாண்டு: நேபாளத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் பார்லிமென்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக, 2022ம் ஆண்டு டிச., 25ல் பதவியேற்றார்.

அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசண்டா நீடித்தார்.

இதற்கிடையே, நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசண்டா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டவிதிகளின்படி எந்தவொரு கூட்டணி கட்சியும் அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றபின் 30 நாட்களுக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பார்லி.,யில் ஆளும் அரசு தங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும்.

இதன்படி, நேற்று முன்தினம் பார்லிமென்ட் கூடியபோது, பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 268 ஓட்டுகளில் பிரசண்டாவுக்கு ஆதரவாக 157 ஓட்டுகளும், அவருக்கு எதிராக 110 ஓட்டுகளும் பதிவாகின. இதையடுத்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரசண்டா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

காத்மாண்டு: நேபாளத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் பார்லிமென்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா தலைமையிலான

மூலக்கதை