அமெரிக்காவுக்குள் ஊடுருவிய மூன்று இந்தியர்கள் கைது

தினமலர்  தினமலர்
அமெரிக்காவுக்குள் ஊடுருவிய மூன்று இந்தியர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: பொருளாதார காரணங்களுக்காக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவைச் சுற்றி உள்ள ஏழை நாடுகளான மெக்சிகோ, கியூபா, டொமினிக் குடியரசு மட்டு மின்றி, நம் நாட்டிலிருந்தும் பலர் ஏஜன்ட்களை நம்பி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் எல்லை நாடான கனடாவில் இருந்து, மூன்று இந்தியர்கள் மற்றும் டொமினிக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஒருவர் என, நான்கு பேர் சரக்கு ரயில் வாயிலாக சமீபத்தில் அமெரிக்காவுக்குள் நுழைந்தனர். இவர்களில் ஒருவர் பெண்.

அந்த ரயில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், பப்பல்லோ நகரில் சென்று கொண்டிருந்த போது, நான்கு பேரும் ஒரு பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதை அங்கு ரோந்து பணியிலிருந்த எல்லை ரோந்து படையினர் பார்த்துவிட்டனர்.

அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். அதில் இந்திய பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டிருந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற மூவரையும் சிறைக்கு அனுப்பினர்.

வாஷிங்டன்: பொருளாதார காரணங்களுக்காக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அமெரிக்காவைச் சுற்றி உள்ள ஏழை நாடுகளான மெக்சிகோ, கியூபா,

மூலக்கதை