8 வயது சிறுவன் சதுரங்கப் போட்டியில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்தி உலக சாதனை.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கிளாசிக் சதுரங்கப் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் ஒருவரை வீழ்த்தி முதல் முறையாக வரலாறு படைத்துள்ளார்.

 

ஒன்பது வயதுக்குட்பட்ட முதல் வீரர்

 

 

போலந்தின் 37 வயது Jacek Stopa என்பவரையே சுவிட்சர்லாந்தில் நடந்த கிளாசிக் சதுரங்கப் போட்டியில் 8 வயதேயான Ashwath Kaushik வீழ்த்தியுள்ளார். கிராண்ட்மாஸ்டரை வென்ற ஒன்பது வயதுக்குட்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை கௌசிக் பெற்றார்.

 

ஆட்டத்தின் ஒருகட்டத்தில் மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், ஆனால் துரிதமாகச் செயல்பட்டு மீண்டுவர முடிந்தது மட்டுமின்றி, வெற்றியும் பெற முடிந்தது எனப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளான் சிறுவன் கெளசிக்.

 

இந்தியாவில் பிறந்த அஸ்வத் கௌசிக் கடந்த ஆறு வருடங்களாகப் பெற்றோருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த 2022ல் வெறும் 6 வயது சிறுவனான கெளசிக் கிழக்கு ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியின் 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் மூன்று தங்கம் வென்று சிறப்பைப் பெற்றார்.

 

விளையாட்டில் ஈடுபாடு இருந்ததில்லை

நான்கு வயதில் இருந்தே இணையமூடாக சதுரங்க விதிகளை கெள்சிக் கற்றுக்கொண்டுள்ளதாகத் தந்தை ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, தங்கள் குடும்பத்தில் எவருக்கும் விளையாட்டில் ஈடுபாடு இருந்ததில்லை என்றும், தமது மகனின் திறமை வியக்கவைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான Kevin Goh Wei Ming தெரிவிக்கையில், தங்கள் அமைப்பின் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியில் கெள்சிக் உறுப்பினராக உள்ளார் என்றும், அவரது திறமை தனித்துவமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

நாளுக்குச் சுமார் 7 மணி நேரம் பயிற்சி மேற்கொள்ளும் கெளசிக், உலக சேம்பின் பட்டம் பெறும் வரையில் தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை