ரூ.10 நாணயத்தை வாங்க வர்த்தகர்கள் மறுப்பு

தினமலர்  தினமலர்
ரூ.10 நாணயத்தை வாங்க வர்த்தகர்கள் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


மதுரை : மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பஸ்கள், வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றில் ரூ.10 நாணயம் வாங்க மறுப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

ரூ.10 நாணயம் புழக்கத்தில் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. சிலர் பரப்பிய வதந்தியால் இந்த நாணயம் செல்லாது என மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் ராமநாதபுரத்தில் ரூ.10 நாணயம் வாங்க மறுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அம்மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் எச்சரித்தார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இப்பிரச்னை உள்ளதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.

உழவர் சந்தை வியாபாரி ராக்கு: தற்போதைய ரூபாய் நோட்டுகள் நீண்ட நாட்கள் பயன்பாட்டிற்கு வருவதில்லை. இதுபோன்ற நாணயங்கள் எங்களை போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். காய்கறிகள் வாங்க வருவோர் இதனை வாங்க மறுக்கிறார்கள் என்றார்.

மதுரை கீழமாரட் வீதி வர்த்தகர் ஜெயராமன் கூறுகையில், ''ரூ.10 நாணயங்களை வாங்க சில வாடிக்கையாளர்கள் மறுக்கின்றனர். இதனால் வியாபாரிகளும் அதை கடைபிடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வாங்க மறுப்போருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

அரசு போக்குவரத்துக்கழக வர்த்தக மேலாளர் யுவராஜ் கூறுகையில், ''இதுபோன்ற புகார்கள் இதுவரை வரவில்லை. ரூ.10 நாணயங்களை தினமும் வங்கிகளில் செலுத்துகிறோம்.

வாங்க மறுப்பதாக புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டோருக்கு மெமோ வழங்கி நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.

மதுரை : மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பஸ்கள், வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றில் ரூ.10 நாணயம் வாங்க மறுப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.ரூ.10 நாணயம் புழக்கத்தில் வந்து பல

மூலக்கதை