கீழடுக்கு, மேலடுக்கு சுழற்சி 4 நாட்களுக்கு கனமழை

தினமலர்  தினமலர்
கீழடுக்கு, மேலடுக்கு சுழற்சி 4 நாட்களுக்கு கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை : வங்கக்கடலின் குமரிக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 23ம் தேதி வரை, சில மாவட்டங்களில் மிக கனமழையும், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக, 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

கடந்த, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

எனவே, மீனவர்கள்மேற்கண்ட பகுதிக்கு, இன்று மட்டும் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

---------------

இன்று கனமழை

---------------

செங்கல்பட்டு,

விழுப்புரம்,

கடலுார்,

தஞ்சாவூர்,

திருவாரூர்,

நாகை,

மயிலாடுதுறை,

புதுக்கோட்டை,

ராமநாதபுரம்,

புதுச்சேரி.

சென்னை : வங்கக்கடலின் குமரிக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 23ம்

மூலக்கதை