தமிழகத்தில் வீடுதோறும் குடிநீர் வசதி; மத்திய அரசு நிதியில் வாரியம் ஜரூர்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 11,866 குடியிருப்புகளில் வசிக்கும், 1.03 கோடி மக்களுக்கு, தினமும் 68.27 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளை, தமிழக குடிநீர் வடிகால் வாரிAயம், முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது.
எந்தெந்த திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி தருகிறது என்பதை அறிந்து, அதை பெற்று, கிராமப் பகுதிகளில் வீடுகளுக்கு நேரடி குடிநீர் வசதி செய்து தரப்படுகிறது.
திட்ட பணிகள்
அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, வீடுகள்தோறும் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
அந்த வகையில், 7 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 11,866 ஊரக குடியிருப்புகளில் உள்ள 1.03 கோடி மக்களுக்கு, தினசரி 68.27 கோடி லிட்டர் குடிநீர் விரைவில் கிடைக்கும்.
இதற்காக, மொத்தம் 40 குடிநீர் திட்ட பணிகள், 14,784 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. இதில், மத்திய அரசின் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், 14,668.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, 7 திட்டங்கள்,40.49 கோடி ரூபாய் மதிப்பில், 93,000 மக்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
இந்த மாவட்டங்களில், இதுவரை குடிநீர் தட்டுப்பாடு என்பது பெரிய பிரச்னையாக இருந்து வந்தது. தற்போதுதான், அதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள, 56 கூட்டுக் குடிநீர் திட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.
195 கோடி லிட்டர் குடிநீர்
இதன் வாயிலாக, வீடுகளுக்கு குழாய் இணைப்புகளின் வாயிலாக, தினசரி ஒரு நபருக்கு, 55 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது; இதற்கு, 1,658.31 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இதில், 136.32 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், 2021ம் ஆண்டில் இருந்து இதுவரை, 2 மாநகராட்சிகள், 11 நகராட்சிகள், 38 பேரூராட்சிகள் மற்றும் 5,044 ஊரக குடியிருப்புகளில் உள்ள, 59.91 லட்சம் மக்களுக்கு, குடிநீர் இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், 4,778 கோடி ரூபாய் மதிப்பில், 35 கோடி லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வாரியத்தின் பராமரிப்பில் உள்ள, 544 கூட்டு குடிநீர் திட்டங்களின் வாயிலாக, 12 மாநகராட்சிகள், 65 நகராட்சிகள், 346 பேரூராட்சிகள் மற்றும் 52,361 ஊரக குடியிருப்புகளில் உள்ள, 4.53 கோடி மக்கள் பயன் பெறும் வகையில், 195 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
7 திட்டங்கள் எங்கே?
மாவட்டம் குடிருப்புகள்
ராமநாதபுரம் 2,306
திண்டுக்கல் 1,422
நாகை 980
திருவாரூர் 667
மதுரை 1,191
விருதுநகர் 1,286
நாமக்கல் 523
சென்னை:மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 11,866 குடியிருப்புகளில் வசிக்கும், 1.03 கோடி மக்களுக்கு, தினமும் 68.27 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
