ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை குறைப்பால் அதிர்ச்சி

  தினமலர்
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை குறைப்பால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை,-தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், விலை குறைப்பு செய்யப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை, திடீரென குறைக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டு, 44 ரூபாய் என நிர்ணயம்செய்யப்பட்டது. இது, 500 மி.லி., 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த பால் விற்பனை வாயிலாக ஆவினுக்கு, லிட்டருக்கு ஏழு ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இதை காரணம் காட்டி, நேற்று முதல் பச்சைநிற பால் பாக்கெட் விற்பனை குறைக்கப்பட்டு உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஆவின் பாலகங்களுக்கு, 50 சதவீதம் சப்ளை குறைக்கப்பட்டது.

இதற்கு மாற்றாக, ஊதா நிற பசும்பால் பாக்கெட் அனுப்பப்பட்டது.

ஒரு வாரத்திற்குள் பச்சை நிற பால் பாக்கெட் முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் கேன்டீன்களுக்கு, 5 லிட்டர் பால் பாக்கெட் வழக்கம்போல இரவு நேரத்தில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

- வினீத்,

நிர்வாக இயக்குனர், ஆவின்

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சென்னையில் தினமும், 15 லட்சம் லிட்டர் ஆவின் பால்விற்பனையாகி வருகிறது. மக்களின் தேவை அறிந்து பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுவிற்பனை செய்யப்படும். அந்த வகையில், நீல நிற பால் பாக்கெட் தேவை அதிகரித்துள்ளதால்,உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் ஊதா நிற பசும்பால் தேவை அதிகரித்து உள்ளது. பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்திகுறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துவிசாரிக்கப்படும்.



சென்னை,-தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், விலை குறைப்பு செய்யப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை, திடீரென குறைக்கப்பட்டு உள்ளது.தி.மு.க., தேர்தல்

மூலக்கதை