பெருவில் எரிவாயு குழாய் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் கிடைத்த 'மம்மி'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லிமா-பெருவில் எரிவாயு குழாய் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மம்மிக்கள் எனப்படும், பதப்படுத்தப்பட்ட மனித உடல்களுடன், பண்டைய காலப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
தென் அமெரிக்க நாடான பெருவில், கலிடா என்ற தனியார் நிறுவனம் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்து வருகிறது.
இதற்காக, தலைநகர் லிமாவில் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, அங்கு பள்ளம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது தொழிலாளர்கள் தோண்டிய பள்ளத்தில், பதப்படுத்தப்பட்ட நிலையில் எட்டு மனித உடல்கள் மற்றும் அரிய வகை பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்தப் பொருட்களை ஆய்வு செய்த அகழ்வாராய்ச்சியாளர்கள், இவை, 12ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, இன்கா பேரரசு காலத்தைச் சேர்ந்தவை என்பதை கண்டறிந்தனர்.
பதப்படுத்தப்பட்ட நிலையில் எட்டு மனித உடல்களுடன், வெள்ளி நாணயங்கள் உட்பட பல்வேறு அரிய பொருட்களும் கிடைத்துஉள்ளன. ஏற்கனவே, பல்வேறு இடங்களில் பண்டையகாலப் பொருட்கள் கிடைத்த நிலையில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லிமா-பெருவில் எரிவாயு குழாய் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மம்மிக்கள் எனப்படும், பதப்படுத்தப்பட்ட மனித உடல்களுடன், பண்டைய காலப் பொருட்களும்




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
