புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: மகாராஷ்டிர அணியில் பிரித்வி ஷா

  தினத்தந்தி
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: மகாராஷ்டிர அணியில் பிரித்வி ஷா

மும்பை, சென்னையில் வருகிற வரும் 18ம் தேதி தொடங்கி செப்டம்பர் 9 வரை புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான மகாராஷ்டிர அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அணியின் கேப்டனாக அங்கித் பவானே நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் இருந்து வெளியேறிய பிரித்வி ஷா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் மும்பை அணியுடன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 25 வயதான அவர், உடற்தகுதி மற்றும் ஒழுக்கம் காரணமாக நீக்கப்பட்டார். இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ மற்றும் இந்தியா இடையேயான பயிற்சி போட்டிகளில் பங்கேற்ற ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆவலுடன் உள்ளார். அதேவேளையில், துலீப் டிராபிக்காக பெங்களூருவில் உள்ள மேற்கு மண்டல அணியில் விளையாட வேண்டியிருப்பதால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விக்கெட் கீப்பர் சவுரப் நவாலே இருவரும் ஒரு ஆட்டத்தில் விளையாடிய பின்னர், தொடரில் இருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா அணி விவரம்: அங்கித் பவானே (கேப்டம்), ருதுராஜ் கெய்க்வாட், பிருத்வி ஷா, சித்தேஷ் வீர், சச்சின் தாஸ், அர்ஷின் குல்கர்னி, ஹர்ஷல் கேட், சித்தார்த் மத்ரே, சவுரப் நாவலே (விக்கெட் கீப்பர்), மந்தர் பண்டாரி (விக்கெட் கீப்பர்), ராமகிருஷ்ண கோஷ், முகேஷ் சவுத்ரி, பிரதீப் தாதே, விக்கி ஒஸ்ட்வால், ஹிதேஷ் வாலுஞ், பிரசாந்த் சோலங்கி, ரவிந்திரன் ஹங்கர்கேகர்.

மூலக்கதை