அதுவும் பெண்மைக்கு அழகுதான் - மிருணாள் தாகூருக்கு பிபாஷா பாசு பதிலடி

  தினத்தந்தி
அதுவும் பெண்மைக்கு அழகுதான்  மிருணாள் தாகூருக்கு பிபாஷா பாசு பதிலடி

இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் மிருணாள் தாகூர், தற்போது தனுஷ் உடன் காதல் என்றெல்லாம் பேசப்பட்டு இன்னும் பிரபலமாகிவிட்டார். தற்போது அவர் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார். ‘முன்னணி பாலிவுட் நடிகையான பிபாஷா பாசு, ஆண்களைப் போல தசைகளைக் கொண்டிருக்கிறார். அவரை விட நான் சிறந்தவள்', என்று உருவக்கேலி செய்யும் வகையில் அவர் பேசியிருந்தார். முன்பு பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பிபாஷா பாசுவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில் மிருணாள் தாகூருக்கு, பிபாஷா பாசு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட பிபாஷா பாசு, "வலிமையான பெண்கள் எல்லோரையும் தூக்கி விடுவார்கள். அழகான பெண்களே, உங்கள் தசைகளை உறுதியாக்கி கொள்ளுங்கள். அதுவும் பெண்மைக்கு அழகுதான். பெண்கள் உடல் ரீதியாக வலிமையாக இருக்கக் கூடாது என்ற முட்டாள்தனமான சிந்தனையை மாற்றிவிடுங்கள்", என்று கூறியுள்ளார். இது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மூலக்கதை