தனது பளபளப்பு மேனிக்கு என்ன காரணம்?- ரகசியத்தை சொன்ன தமன்னா

  தினத்தந்தி
தனது பளபளப்பு மேனிக்கு என்ன காரணம்? ரகசியத்தை சொன்ன தமன்னா

சென்னை, தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள தமன்னா, பாலிவுட் சினிமாவிலும் கவர்ச்சியில் கலக்கி வருகிறார். இவரது குத்துப்பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பால் நிற மேனி நடிகை என புகழப்படும் தமன்னா, தனது பளபளப்புக்கு என்ன காரணம்? என்ற ரகசியத்தை சொல்லியிருக்கிறார். ‘‘நான் ஒரு சரும பராமரிப்பு முறையைப் பின் பற்றி வருகிறேன். சிறந்த சருமத்துக்கான ரகசியம் அதுதான். இதை தினமும் செய்ய வேண்டும். சரும பராமரிப்பு என்பது உடற்பயிற்சி, நல்ல மனநலம், நல்ல உணவு, தூக்கம் இவை தான். இவை அனைத்துமே பிரகாசமான சருமத்தை தரும். அதைத் தவறாமல் செய்தால் மட்டுமே பலனளிக்கும்'', என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை