கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய தமிழக வீரர்

  தினத்தந்தி
கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய தமிழக வீரர்

அஸ்தானா, அல்மைட்டி மாஸ்டர்ஸ் கினாவ் கோப்பை செஸ் போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் 9-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய வீரர் ரோகித் கிருஷ்ணா, அர்மேனியாவின் ஆர்தர் டேவிட்யானை வீழ்த்தியதன் மூலம் எலோ தரவரிசை புள்ளியில் 2500-ஐ கடந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார். சென்னையில் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் 20 வயதான ரோகித் கிருஷ்ணா இந்தியாவின் 89-வது கிராண்ட்மாஸ்டர் ஆவார்.

மூலக்கதை