பஹல்காம் பயங்கரவாதிகள் சென்னை விமானத்தில் பயணமா? இலங்கை விமான நிலையத்தில் தீவிர சோதனை - லங்காசிறி நியூஸ்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை இந்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது. இந்த சூழலில் சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 11.59 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்த UL 122 விமானத்தில் இலங்கை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், பயங்கரவாதிகள் யாரும் விமானத்தில் பயணம் செய்யவில்லை என தெரியவந்த பின்னர், விமானம் விடுவிக்கப்பட்டதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மூலக்கதை
