ஜப்பானில் வேலை வாங்கி தருவதாக மோசடி! இலங்கையில் பெண் தலைமறைவு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
ஜப்பானில் வேலை வாங்கி தருவதாக மோசடி! இலங்கையில் பெண் தலைமறைவு  லங்காசிறி நியூஸ்

ஜப்பானில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இலங்கை பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர். இலங்கையின் கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஜப்பானில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து சுமார் 5 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவொரு இளைஞருக்கும் ஜப்பானில் வேலைவாய்ப்பை அவர் வாங்கித் தரவில்லை. தன்னால் ஜப்பானில் 2 வருட தொழில் விசாவை வாங்கி தர முடியும் என நம்பிக்கை அளித்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். இந்நிலையில் கல்கிஸ்ஸை பொலிஸார் தலைமறைவான பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மூலக்கதை