சசிகுமாரின் "டூரிஸ்ட் பேமிலி" 2வது பாடல் நாளை வெளியீடு

  தினத்தந்தி
சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி 2வது பாடல் நாளை வெளியீடு

சென்னை,சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அயோத்தி, கருடன், நந்தன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.அதனை தொடர்ந்து தற்போது சசிகுமார் 'டூரிஸ்ட் பேமலி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'குட் நைட்' படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்தின் டீசரில் சசிகுமார் - சிம்ரன் பேசும் இலங்கை தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.படத்தின் முதல் பாடலான 'முகை மழை' பாடலை படக்குழு வெளியாகி வைரலானது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் ஷான் ரோல்டன் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான 'ஆச்சாலே' பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.Pack your bags & Bring your best moves It's time to grove for "Aachaley" - Next song from #TouristFamily drops Tomorrow at 5PM ⏳Get ready to dance, vibe & throw those reels Written & directed by @abishanjeevinth ✨A @RSeanRoldan musical @SasikumarDir… pic.twitter.com/SUe9tXgnwk

மூலக்கதை