"தண்டோரா" - பிந்து மாதவியின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

  தினத்தந்தி
தண்டோரா  பிந்து மாதவியின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை,'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பிந்து மாதவி. தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க-2 ஆகிய வெற்றி படங்களில் நடித்தார்.தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு பட உலகிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கிறார். சில காலங்களாக தெலுங்கில் நடிக்காமல் இருந்து வந்த பிந்து மாதவி தற்போது மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு "தண்டோரா" எனப்பெயரிடப்பட்டுள்ளது. ரவீந்திர பானர்ஜி முப்பனேனி தயாரிக்கும் இப்படத்தை முரளிகாந்த் இயக்குகிறார்.இந்நிலையில், பிந்து மாதவியின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவர் இப்படத்தில் "ஸ்ரீலதா" என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிந்து மாதவியுடன் நவ்தீப், நந்து, ரவி கிருஷ்ணா, மாணிகா சிக்கலா, மவுனிகா ரெட்டி மற்றும் ராத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.A post shared by Loukya Entertainments (@loukya_entertainments)

மூலக்கதை