டி20, ஒருநாள் தொடர்; வங்காளதேசத்திற்கு செல்லும் இந்தியா... எப்போது தெரியுமா..?
புதுடெல்லி,இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் அடுத்த மாதம் 25ம் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.இந்த தொடர் ஜூன் 20ம் தேதி முதல் ஆகஸ்டு 04ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் முறையே லீட்ஸ், பர்மிங்காம், லார்ட்ஸ் லண்டன், மான்செஸ்டர், ஓவல் லண்டன் ஆகிய மைதானங்களில் நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆட உள்ளது.3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி வங்காளதேசம் செல்கிறது. இந்த தொடர் ஆகஸ்டு 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் (ஆகஸ்டு 17, 20, 23), இதையடுத்து டி20 போட்டிகளும் (ஆகஸ்டு 26, 29, 31) நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ளது. போட்டி அட்டவணை விவரம்:ஒருநாள் தொடர்:- முதல் ஒருநாள் போட்டி: ஆகஸ்டு 17 - மிர்பூர்2வது ஒருநாள் போட்டி: ஆகஸ்டு 20 - மிர்பூர்3வது ஒருநாள் போட்டி: ஆகஸ்டு 23 - சட்டோகிராம்டி20 தொடர்:- முதல் டி20 போட்டி: ஆகஸ்டு 26 - சட்டோகிராம்2வது டி20 போட்டி: ஆகஸ்டு 29 - மிர்பூர்3வது டி20 போட்டி: ஆகஸ்டு 31 - மிர்பூர்Dates announced for #TeamIndia's tour of Bangladesh.The Senior Men's Team will play three T20Is and as many ODIs against Bangladesh.#BANvIND pic.twitter.com/xRnQa0BlZL




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
