டெல்லியில் குழந்தைகளை ரூ.10 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது

புதுடெல்லி,டெல்லியில் குழந்தை இல்லாத பணக்கார தம்பதிகளுக்கு குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் இருந்து ஏழைகளிடம் பச்சிளம் குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பணக்காரர்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விற்று அதிக லாபம் சம்பாதித்து வந்துள்ளனர்.இவர்களில் ஜிதேந்திரா (வயது 47), அஞ்சலி (36), யாஸ்மின் (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டது. அதன் பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் இதற்கு முன்பு 35-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
மூலக்கதை
