ஐ.பி.எல். 2025: ஆர்.சி.பி. கேப்டனாக விராட் செயல்படுவாரா..? - டி வில்லியர்ஸ் பதில்

  தினத்தந்தி
ஐ.பி.எல். 2025: ஆர்.சி.பி. கேப்டனாக விராட் செயல்படுவாரா..?  டி வில்லியர்ஸ் பதில்

கேப்டவுன்,ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக (24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ், மேக்ஸ்வெல், சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்களை விடுவித்தது.இதனையடுத்து நடைபெற்ற மெகா ஏலத்தில் 19 வீரர்களை வாங்கியுள்ளது. இதன் மூலம் பெங்களூரு அணியில் மொத்தம் 22 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,அது உறுதி செய்யப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் தற்போதைய அணியை பார்க்கும் போது விராட் கோலி கேப்டனாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நமது அணியில் புவனேஸ்வர் குமார், ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அதே சமயம் ரபாடா, லுங்கி நிகிடி ஆகியோரை நாம் தவற விட்டு விட்டோம். நல்ல பார்மில் பிட்டாக இருக்கும் நிகிடி ஸ்லோயர் பந்துகளை சிறப்பாக வீசக்கூடியவர்.அதே போல நாம் ரவிச்சந்திரன் அஸ்வினை தவற விட்டோம். இருப்பினும் சி.எஸ்.கே அணிக்காக அவர் மீண்டும் விளையாடுவதை பார்ப்பது மகிழ்ச்சி. நியாயமாக சொல்ல வேண்டுமெனில் ஆர்.சி.பி அணி இம்முறை ஓரளவு நல்ல சமநிலையை கொண்டுள்ளது. இருப்பினும் நமது அணியில் மேட்ச் வின்னிங் ஸ்பின்னர் இல்லை. அதையும் தாண்டி சின்னசாமி மைதானத்தை கோட்டையாக்கும் அளவுக்கு நம்மிடம் சமநிலையுடன் கூடிய அணி இருக்கிறது.இந்த அணி சின்னசாமி மைதானத்தில் வேலை செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் நம்முடைய அணியில் ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னர், மணிகட்டு ஸ்பின்னர் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். அதற்கு தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வீரர்களை மாற்றி வாங்கிக் கொள்ளும் நடைமுறையை பி.சி.சி.ஐ கொண்டு வர விரும்புகிறேன். அதில் விலை போகாத வீரர்களில் ஒரு நல்ல வீரரை கூட நாம் வாங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை