40 செ.மீ.தான்... பும்ராவுக்கும் மற்ற பவுலர்களுக்கும் உள்ள வித்தியாசம் - பாக்.முன்னாள் வீரர்
பெர்த், இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் பும்ரா 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா, 3 வகையான கிரிக்கெட்டிலும் தனித்துவமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணிகளை திணறடித்து வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.இந்நிலையில் பந்தை வெள்ளைக் கோட்டிலிருந்து பும்ரா 40 சென்டிமீட்டர் முன்னதாக கையில் இருந்து விடுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அதனால் பந்து தரையில் பட்டதும் அதிகப்படியான வேகத்தில் வருவதாக அவர் கூறியுள்ளார். அதனாலேயே மற்ற பவுலர்களை காட்டிலும் அவரை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாக வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பும்ரா பந்தை கை பின்னால் இருந்து வீசுகிறார். அந்த ஆக்சன் குறிப்பிட்ட பிட்ச்களில் பேட்ஸ்மேன் எதிர்பார்க்காத வகையில் பந்தை சறுக்குகிறது. மேலும் பந்து குறைவான உயரத்தில் வருவதால் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள். அது இயற்கையானது. இறுதியில் மணிக்கட்டை ப்ளிக் செய்வது மிகவும் கடினம். மேலும் பும்ரா பந்தை ரிலீஸ் செய்யும் இடம் கிட்டத்தட்ட 40 சென்டி மீட்டர் முன்னே இருக்கிறது. அது மற்றவர்களை காட்டிலும் இந்த வேகத்துக்கு பெரிய வித்தியாசம். அதனாலேயே அவருடைய பந்துகள் தரையில் பட்டதும் சறுக்கிக்கொண்டு செல்கிறது" என்று கூறினார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
