மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை

தினமலர்  தினமலர்
மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை

புதுடில்லி, :'ரயில் பயணங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகைகளை மீண்டும் அமல்
படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்' என பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு தெரிவித்துள்ளது.ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள், கொரோனா பரவல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதற்கிடையே அவர்கள் சலுகைகளை தாமாக முன்வந்து கைவிட ஊக்குவிக்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இதில், வசதியான மூத்த குடிமக்கள் தங்கள் சலுகைகளை விட்டுக் கொடுத்ததால் ரயில்வேக்கு கணிசமான லாபம் கிடைத்தது.



இந்நிலையில், பார்லி., - எம்.பி.,க்கள் குழு, 4ம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு, கட்டணத்தில் 40 முதல் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் நெருக்கடியின் போது அது நிறுத்தப்பட்டது.


தற்போது இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதால், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். குறைந்தபட்சம் 'ஸ்லீப்பர்' மற்றும் 'ஏசி' வகுப்புகளில் பயணிப்போருக்கு சலுகை வழங்க பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மூத்த குடிமக்களுக்கு தரப்படும் சலுகைகளுக்காக, ரயில்வேக்கு ஆண்டுதோறும் 2,000 கோடி ரூபாய் செலவாவது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி, :'ரயில் பயணங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்' என பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை