பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் கூடாது: ஐ.நா.,வுக்கான இந்திய தூதர்

தினமலர்  தினமலர்
பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் கூடாது: ஐ.நா.,வுக்கான இந்திய தூதர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெய்ஜிங்: பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது என ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: உலகின் மிகவும் மோசமான மற்றும் பயங்கரவாதிகள் தொடர்பான உண்மையான மற்றும் ஆதார அடிப்படையிலான பட்டியலின் முன்மொழிவுகள் கிடப்பில் போடப்படுவது மிகவும் வருந்தத்தக்கது.

பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது அதில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உலகளவில் அதிகரித்து காணப்படுகிறது. இது உலகம் முழுவதிலும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த கூட்டத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த குரல் கொடுத்தால் மட்டுமே அதற்கு தீர்வு காணமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.

பெய்ஜிங்: பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது என ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்.சர்வதேச அமைதி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை