இன்று மாலை வரை கெடு போராட்ட களத்தை விட்டு மக்கள் வெளியேற உத்தரவு: இலங்கை போலீஸ் அதிரடி

தினகரன்  தினகரன்
இன்று மாலை வரை கெடு போராட்ட களத்தை விட்டு மக்கள் வெளியேற உத்தரவு: இலங்கை போலீஸ் அதிரடி

கொழும்பு: இலங்கையில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்கள், முக்கிய போராட்ட களமான காலி முகத்திடலை விட்டு இன்று மாலைக்குள் வெளியேறும்படி போலீஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால், மக்கள் அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தலைநகர் கொழும்பில் உள்ள காலித் முகத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடாரம் அமைத்து முகாமிட்டு, தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, புதிய அதிபராக பதவியேற்று கொண்ட ரணில் விக்கிரமசிங்க, போராடுவது மக்களின் உரிமை என்றும், அமைதியான முறையில் போரட்டத்தை தொடரும்படி கேட்டு கொண்டார். இந்நிலையில், மக்கள் போராட்டத்தின் முக்கிய களமாக விளங்கும் காலி முகத்திடலை விட்டு இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற இலங்கை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நகர்புற மேம்பாட்டு துறைக்கு சொந்தமான இடத்தை விட்டு வெளியேற விட்டால், போராட்டக்காரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். ஆனால், காலிமுகத்திடலை விட்டு மக்களை வெளியேற்றும்படியான நீதிமன்ற உத்தரவை போலீசார் பெறவில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

மூலக்கதை