நேட்டோ அமைப்பில் சேர்க்க பின்லாந்து, சுவீடனுக்கு செனட் சபை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
நேட்டோ அமைப்பில் சேர்க்க பின்லாந்து, சுவீடனுக்கு செனட் சபை ஒப்புதல்

வாஷிங்டன்: வடக்கு ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, சுவீடன் நேட்டோவில் சேர்க்க, அமெரிக்க செனட் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் நேட்டோவில் சேருவதை தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் அண்டை நாடுகளான பின்லாந்து, சுவீடன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு கடந்த மே மாதம் விண்ணப்பித்தன. இதற்கு ரஷ்யா, அதன் ஆதரவு நாடான துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பின்லாந்து, சுவீடன் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆதரவாக 95 ஓட்டுகள், எதிர்த்து ஒரு ஓட்டும் பதிவானது. இதைத் தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட வடக்கு அட்லாண்டிக் ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் பின்லாந்து, சுவீடன் நாடுகள் விரைவில் இணைய உள்ளன. ஏற்கனவே, கனடா உள்ளிட்ட நாடுகள் பின்லாந்து, சுவீடன் நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்துள்ளன.

மூலக்கதை